இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.
மிதுன ராசிக்கு குரு 7வது மற்றும் 10வது வீட்டின் அதிபதி ஆவார். 7வது மற்றும் 10வது வீடு கேந்திர ஸ்தானமாகும். அதனால் குரு வலுத்து இருந்தால் கேந்திர ஆதிபத்திய தோஷம் உடையவர். மேலும் 7வது இடம் ஒரு மாரக மற்றும் பாதக ஸ்தானமாகும்.மேலும் குரு மிதுன ராசியின் அதிபர் புதனை கடுமையான பகையுடன் அணுகுபவர். ஆகவே குரு மிதுன ராசிக்கு ஒரு கொடுமையான பாபி ஆகிறார்.
குரு மிதுன ராசியில் பகை என்ற நிலையில் வலு குறைந்து நிற்கின்றார்.இது பாப கிரகம் வலு இழந்து இருப்பது நல்லது. மேலும் மிதுன ராசியில் இருப்பதால் மிதுன ராசிகாரர்களுக்கு குரு லக்கினத்தில் இருக்கிறார். லக்கினம் என்பது குருவுக்கு மிகவும் நல்ல ஸ்தானம் ஆகும். ஆக வலு இழந்த குரு லக்கினத்தில் இருந்து மிதுன ராசிகாரர்களுக்கு குரு பெயர்ச்சியின் மூலமாக அடுத்த ஒரு வருடம் பலன்களை அளிக்க போகிறார்.
7வது இடம் வாழ்க்கை துணைவர் அல்லது வாழ்க்கை துணைவியை குறிக்கும். மேலும் 7ஆம் இடம் என்பது தொழில் ரீதியாக ஒன்று சேர்ந்து வேலை செய்வது அல்லது கூட்டாளிகளை குறிக்கும். 10வது இடம் என்பது ஜீவன ஸ்தானம் (தொழிலை குறிக்கும்).
லக்கினம் என்பது 7வது வீட்டுக்கு 7வது ஸ்தானமாகும். இது குருவின் பலத்தை மேலும் குறைத்து விடும். 10வது வீட்டிற்கு 4வது இடமாக குரு லக்கினத்தில் உள்ளார். இதனால் சற்று நல்ல பலன்களை மிதுன ராசியினர் இந்த 2013 வருடத்தில் எதிர் பார்க்கலாம்.
இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின் பலன்களை நாம் பார்ப்போம்.
31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் குடும்பத்தில் சற்று அமைதியான சூழ்நிலை நிலவும். வேலை செய்யும் இடங்களில் மற்றவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். தொழில் சம்பந்த பட்ட விசயங்கள் சற்றே சாதகமாக இருக்கும்.
08.06.2013 முதல் 02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் மிதுன ராசி மற்றும் மிதுன இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.
இந்த கால கட்டத்தில் தொழில் சம்பந்த பட்ட விசயங்களில் சற்றே நிதானமாக செயல் படுவது மிக நல்லது. தொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களை அனுசரித்து முடிவு எடுப்பது நல்லது. சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது மேலும் நீங்கள் எடுக்கும் சில தவறான முடிவுகள் உங்கள் வாழ்க்கை துணையுடன் உள்ள வேற்றுமையை மேலும் வளர்க்கும்.
02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
இந்த கால கட்டத்தில் தொழில் சம்பந்த பட்ட விசயங்களில் சற்று சாதகமான பலன்கள் தென்படும். தொழில் செய்யும் இடங்களில் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த வேற்றுமைகள் சற்றே விலகும்.
13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
இந்த கால கட்டத்தில் தொழில் சம்பந்த பட்ட விசயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக நடக்க வேண்டும். தவறான முடிவால் தொழில்ளில் நெருக்கடிக்கு ஆளாக வேண்டி வரும் .வாழ்க்கை துணையுடன் கடுமையான மன வேற்றுமை அல்லது இடைவெளி உண்டாக நேரிடலாம். கவனத்துடன் செயல்படா விட்டால் சற்றே இடைஞ்சலுக்கு ஆளாக நேரிடலாம்.
30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
இது வரை இருந்து வந்த மந்தமான அல்லது எதிர் மறையான சூழ்நிலைகள் மாறி தொழில் சம்பந்த விசயங்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் உறவு சற்றே ஆறுதல் அளிக்கும். வாழ்க்கை துணையுடன் இது வரை இருந்து வந்த வேற்றுமை உணர்வுகள் சற்றே குறைந்து சாதகமான நிலைமை தென்படும்.
15.08.2013 முதல் 23.09.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
தொழில் சம்பந்த விசயங்கள் அதிகமான நல்ல பலன்களை தர ஆரம்பிக்கும். தொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களுடன் நல்ல உறவு ஏற்பட ஆரம்பிக்கும். உங்களின் சமயோசிதமான முயற்சியால் உங்கள் வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த கசப்புகள் மாறும். சாதகமான சூழ்நிலை தென்படும்.
23.09.2013 முதல் 08.11.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
மீண்டும் தொழில் மற்றும் தொழில் கூட்டாளிகளுடன் அபிப்ராய பேதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நிதானத்துடன் செயல் பட்டால் நட்டங்களை தவிர்க்கலாம். இதே போல் வாழ்க்கை துணையுடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டினை புத்திசாலியான முயற்சியால் முறியடிக்கலாம்.
08.11.2013 முதல் 21.02.2014 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.
மிதுன ராசியினரின் கவனத்திற்கு:
1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது.
2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள் நடைபெறும்.
3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று மாறுபட்டு நடைபெறும்.
4. மிதுன ராசியில் பிறந்தவர்கள் மோசமான தசையில் இருந்தால் இந்த குரு பெயர்ச்சி சற்று வாழ்க்கை துணையுடன் உள்ள உறவு மற்றும் தொழில் சம்பந்த பட்ட விசயங்களில் சற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு..
5. மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு குரு கெட்ட ஆதிபத்தியம் ஏற்பட்டு இப்பொழுது குருவின் மஹா தசை நடந்து கொண்டு இருந்தால் சற்றே மோசமான வகையில் பலன்கள் நடை பெரும்
6. மிதுன ராசியினருக்கு 7வது வீட்டு திசை அல்லது சுக்கிர, குரு திசை நடந்து மேற்படி கிரகங்கள் துர் ஸ்தானத்தில் இருந்தால் வாழ்க்கை துணையுடனான உறவு பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம்.
7. மிதுன ராசியினருக்கு 10வது வீட்டு திசை அல்லது செவ்வாய் திசை நடந்து மேற்படி கிரகங்கள் துர் ஸ்தானத்தில் இருந்தால் தொழில் ரீதியான பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம்.
8. குரு பிறந்த ஜாதகத்தில் நல்ல விட்டில் இருந்தால், குரு பெயர்ச்சி நன்றாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நன்றாகவே அமையும்.
9. நல்ல திசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, கெடுதலான குரு பெயர்ச்சியால் பெரிய துன்பங்கள் நடக்காது.
10. லக்கினத்தில் குரு இருப்பதால் தொழிலிலோ அல்லது வாழ்க்கை துணையுடன் இருக்கும் உறவிலோ பெரிய பாதிப்புகள் மிதுன ராசியினருக்கு ஏற்படாது.
11. குருவின் பலமற்ற பார்வை 5வது, 7வது மற்றும் 9வது வீட்டில் விழுகின்றது. ஆகவே குடும்ப உறவுகள் பாதிப்பை அடையாது.
12. மிதுன ராசியினர் அசட்டு தனமான அல்லது அவசர முடிவுகளை எடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது.
13. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும்.
குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள்.
Comments
Post a Comment